நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் திரு கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முதல் நாளான இன்று மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சாயரட்சை பூஜைகள் முடிந்ததும், சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் ஹோமங்கள் செய்யப்பட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்துவரப்பட்டு பரணி மஹா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி