தமிழக அரசு, நெல்லை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்கம்போல் ஜூன் 1ஆம் தேதி முதல் பாபநாசம் அணையில் உள்ள நீர் இருப்பைப் பொறுத்து பாசனத்திற்காக நீர் திறக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அம்பை முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா தலைமையில் தவெக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் சுகுமாரை இன்று சந்தித்து மலர்க்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தனர்.