வீரவநல்லூர்: நெசவாளர்களிடம் அடாவடியில் ஈடுபட்ட தவெக நிர்வாகி

வீரவநல்லூர் பாரதி நகரில் நெசவாளர்கள் தங்கள் வேலைக்காக சாலையின் நடுவே நூல்களை கட்டி வைத்துள்ளனர். அப்போது தவெக நிர்வாகி சிவா என்பவர் இன்று அந்த வழியாக காரில் சென்றபோது, நூல்கள் கட்டப்பட்டிருந்ததை கண்டு நெசவாளர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். வழி ஏற்படுத்துவதாக கூறியும் கேட்காமல், அவர் தனது காரை நூல் மீது ஏற்றி நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி