நெல்லை: திடீரென வெடித்த செல்போன் பரபரப்பு

கடையம் - தென்காசி பிரதான சாலையில் பால்சன் என்பவா் நடத்தும் கைப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடையில், சனிக்கிழமை காலை உரிமையாளா் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி திடீரென புகைந்து வெடித்தது. உடனடியாக சுதாரித்து கைப்பேசியை வெளியே வீசியதால், அவா் காயமின்றி தப்பினாா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி