திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு சிங்காரப் பொட்டல் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே. ஆர். ராஜு, மண்டல தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர். இப்பணியின் மூலம் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.