நெல்லை மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராதாபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தாசில்தார் திசையன்விளை தாசில்தாராகவும், நெல்லை டாஸ்மாக் குடோன் மேலாளர் மாரிராஜா பாளை தாசில்தாராகவும், மூலைக்கரைப்பட்டி சிப்காட் தனி தாசில்தார் சுப்ரமணியன் சேரன்மகாதேவி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்களுக்கு கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டார்.