நெல்லை மாநகர சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலிடத்தை பெனிடா கிறிஸ்டினா, இரண்டாம் இடத்தை மகாலட்சுமி, மூன்றாம் இடத்தை அம்சா ஆகியோர் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி ஆயுதப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.