நெல்லை: மாணவர்களிடம் பிட் பேப்பர்; ஜெராக்ஸ் கடைகளுக்கு எச்சரிக்கை

நெல்லை பிளஸ் டூ தேர்வு மையங்களில் மாணவர்களிடம் பிட் அடிப்பதற்காக வைத்திருந்த மினி ஜெராக்ஸ் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ஜெராக்ஸ் கடையிலும் மாணவர்கள் பிட் அடிப்பதற்காக மினி ஜெராக்ஸ் போட்டு கொடுக்கக் கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார். மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி