கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் ‘ஓ’ பிரிவு அலுவலகத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மேஜைக்கு அடியில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரத் தேடுதலுக்குப் பிறகு அந்தப் பாம்பைப் பிடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி