நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது பிளாட்பார்ம் நீட்டிப்பு மற்றும் புதிய நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் விவின் குமார் இன்று ஆய்வு செய்தார். அவர் பிளாட்பார்ம் நீட்டிப்பு பணி உட்பட பல்வேறு புதிய பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.