சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாரின் நினைவுநாளை முன்னிட்டு, டவுன் சாலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் நெல்லை வந்து வ. உ. சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.