நெல்லை: வீடுகளை சூழ்ந்த மழை நீர்.. மக்கள் அவதி

நெல்லை மாநகராட்சி 43-வது வார்டான வீரமாணிக்கபுரம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் கால்வாய்களில் சரியாக செல்லாததால் தண்ணீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பள்ளிக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி