நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள சாதிய அடையாளங்களை அகற்றும் சிறப்பு நடவடிக்கைகளை எஸ்பி பிரசன்ன குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மானூர் காவல் நிலையப் பகுதிகளில் மின்கம்பங்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், பொதுச் சுவர்கள் மற்றும் பிற இடங்களில் இருந்த சாதிய வர்ண அடையாளங்கள் நேற்று (மே 19) அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.