உதயநிதியை கண்டித்து நெல்லையில் போராட்டம்

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, பாஜகவினர் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி