நெல்லையில் நாளை மின்தடை

வள்ளியூர் கோட்ட மின் செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கோட்டைகருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்தி குளம், முடவன் குளம், தெற்கு கள்ளிகுளம், சமூக ரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி