நெல்லை: பாதிரியார் வீட்டை சூறையாடிய விவகாரம்; போலீஸ் அதிரடி

மானூர் அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்த தேவாலய குருவான சாமுவேல் டேவிட் நவமணி (48) என்பவரின் வீட்டை, திருச்சபை நிர்வாகப் பிரச்சினை காரணமாக சிலர் பாதிரியார் இல்லாதபோது முற்றுகையிட்டு சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நவமணி அளித்த புகாரின் பேரில் போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி