தாழையூத்து, ராஜவள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுமணி(28) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், பொன்னுமணியைக் கொலை செய்ய முயன்றனர். இந்தச் சம்பவத்தில் இசக்கி துரை மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரை போலீஸார் நேற்று (ஜனவரி 10) கைது செய்துள்ளனர். அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.