நெல்லை மாநகரம் முழுவதும் குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கை (ஷீல்ட்நெட்) மேற்கொள்ளப்படுகிறது. நேற்று (மே 22) 3வது நாளாக நடந்த சோதனையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 57 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 368 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர்களை நெருக்கமாக கண்காணித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.