பேட்டை அருகே கருங்காடு பகுதியில் நேற்று (பிப்.22) மதியம் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. இதை கவனித்த மக்கள் பதறிப்போய் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். அதன் பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.