தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த சரண் (20) மற்றும் ஸ்ரீதர் அருண்குமார் (25) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.