நெல்லை மாநகராட்சி 5வது வார்டு பொதுமக்கள், வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் தலைமையில் மாநகராட்சி குறைதீர் கூட்டத்திற்கு இன்று வந்தனர். கூட்ட அரங்கில் அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். தங்கள் பகுதியில் சேதமான சாலையை சீரமைக்கவில்லை என்றும், பல மாதங்களாக புதிதாக சாலைகள் அமைத்து தரவில்லை என்றும், இதனால் பொதுமக்கள் சாலையில் நடமாட முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர்.