நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த டவுனைச் சேர்ந்த செந்தூர் பாண்டி (31) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 900 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. காவல் துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.