நெல்லை மத்திய மாவட்ட திமுக தச்சநல்லூர் வடக்கு பகுதி சார்பில், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் வழிகாட்டுதலின்படி, தச்சநல்லூரில் வாக்காளர் சேர்ப்பு ஆய்வு நடைபெற்றது. இதில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முத்து செல்வி, கவுன்சிலர் சங்கர் மற்றும் வட்ட செயலாளர்கள் கணேசன், சடாமுனி, வட்ட பிரதிநிதி விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு, வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.