நெல்லையில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மகரஜோதி (39) என்பவர், சக பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் மகரஜோதியை கைது செய்தனர். கணவரை பிரிந்த மகரஜோதி, கோவையை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.