நெல்லை டவுனில் நேற்று முன்தினம் (மார்ச் 18) முன்னாள் காவலரும் பள்ளிவாசல் முத்தவல்லியுமான ஜாகிர் உசேன் பிஜிலி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச் 20) எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஜாகிர் உசேன் பிஜிலி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் பிஜிலி குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.