நெல்லையில் வெறியாட்டம் நடத்திய கும்பலில் ஒருவர் சுட்டுபிடிப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மற்றும் நெல்லை மாவட்டம் மானூர் தெற்குபட்டி கிராமங்களில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த கும்பல் பொதுமக்களை சரமாரியாக வெட்டியதில் 8 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐயப்பன் என்பவனை இன்று காவல்துறையினர் சுட்டுப்பிடித்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி