நெல்லை சீதபற்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த கால் இல்லாத மாற்றுத்திறனாளி முத்துமாரி, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து, கஞ்சா வழக்கு போடுவதாக மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக முத்துமாரி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.