நெல்லை, பாளையங்கோட்டை கேடிசி நகரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து வாகனத்தில் கிளம்பினார். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலை முழுவதும் திரண்டிருந்தனர். கட்டுபடுத்தவே முடியாத அளவிற்கு மக்கள் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்துக்கு மத்தியில் தனது தொண்டர்களை உற்சாக படுத்தியபடி, கை அசைத்துக்கொண்டே விஜய் சென்றார்.