திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் டயர் நிறுவனத்தில் பொதுமேலாளராக முருகேசன் (60) மற்றும் அதிகாரியாக வெள்ளத்துரை பணியாற்றினர். இவர்கள் கடந்த 2015-ல் கேன்டீன் உதவியாளர் நாராயணனை மிரட்டி தாக்கி, சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் ஆதாரங்களில் குறைபாடு காரணமாக முருகேசன் மற்றும் வெள்ளத்துரை விடுதலை செய்யப்பட்டனர்.