நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றும் பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த கருப்பன்துறை, கரண் (எ) இயேசுவா, மாரிமுத்து, சிவா, கௌதம் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை சந்திப்பு போலீசார் பரிந்துரைத்தனர். மாநகர காவல் ஆணையரின் ஆணைப்படி, இந்த நான்கு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.