திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, ஈக்கள், கரப்பான் பூச்சிகள், எலிகள் நடமாட்டம், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல், போதுமான காற்றோட்டம் இன்மை மற்றும் முறையற்ற கழிவு மேலாண்மை போன்ற காரணங்களால் அந்தக் கடையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.