நெல்லை மாவட்டம் கே.டி.சி நகரில் இன்று (ஏப்ரல் 8) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜய், மக்கள் உள்ளத்துக்கு சென்ற பிறகு கட்சி ஆரம்பித்ததாக கூறினார். கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டாலும் மக்களிடம் அது எடுபடவில்லை. ஜனநாயகன் படத்தை முடக்கியது, எஸ்ஓபி என்கிற பெயரில் தனியாக ரூல்ஸ் என பல வழிகளில் நெருக்கடி கொடுத்ததும் விஜய்யை யாராலும் தடுக்க முடியவில்லை என பேசினார்.