நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனது தம்பி சுர்ஜித் கவினை தொடர்பு கொண்டு பெண் கேட்க வாருங்கள் என அழைத்தான். ஜூலை 27 அன்று கவின் தனது தாத்தாவின் சிகிச்சைக்காக வந்தான். கவின் தாத்தாவை மருத்துவமனையின் ஐபி வார்டுக்கு அழைத்து சென்ற போதுதான் கவின் காணவில்லை என்பதே தெரிந்தது. அதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.