திருநெல்வேலியில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் இன்று (ஆக.1) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக, கவினின் உடலை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது உடலை பெற்றுக்கொண்டனர். முன்னதாக கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என். நேரு, ஆட்சியர் மரியாதை செலுத்தினர்.