நெல்லை: கவின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் உடலை பெற பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். உடலை வாங்க மறுத்து கவினின் பெற்றோர் நடத்திய 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 

இன்று (ஆகஸ்ட் 1) காலை 9 மணி அளவில் தந்தை சந்திரசேகரிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கவினின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். முன்னதாக சுர்ஜித்தின் தாயாரை கைது செய்ய வேண்டும் என்று கவின் தரப்பினர் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி