நெல்லை: கவின் கொலை வழக்கு.. இளம் பெண் வெளிட்ட வீடியோ

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (26) கடந்த ஜூலை 27 அன்று படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் பெண்ணின் தம்பி சுர்ஜித் (24) என்பவர் கவினை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், இன்று (ஜூலை 31) கவின் காதலித்தாக கூறப்படும் இளம் பெண் சுபாஷினி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என எனக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்கள் உறவு குறித்தோ எங்கள் இரண்டு பேரையும் யாரும் தப்பா பேச வேண்டாம். 

உங்க யாருக்கும் எதுவும் தெரியாது. உண்மை தெரியாமல் எதுவும் பேச வேண்டாம். எங்க அப்பா அம்மாக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் தண்டிக்க நினைப்பது தப்பு. அவர்களை விட்டுவிடுங்கள் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி