திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1200 மாணவர்கள், பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்றனர். ஏழு முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவியர் எடை மற்றும் வயது அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.