திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவரணி செயலாளராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இன்று (மார்ச் 14) நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ராஜீவ் காந்தியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.