திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று (ஜூன் 6) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை மூத்த குடிமக்கள் பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைபேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.