நெல்லையில் இருந்து களக்காடு நோக்கி நேற்றிரவு (ஜூன் 2) சென்ற அரசு பேருந்து, மேலச்செவல் சந்திப்பில் சாலை நடுவில் பயணிகளை இறக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பைக்கில் வந்த நபர் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சிலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.