நெல்லை மாநகராட்சி நெல்லை மண்டலத்துக்குட்பட்ட டவுன் 21 வது வார்டு பகுதியில் உள்ள கால்வாயில் அதிகளவு அமலைச் செடிகள் மற்றும் பிற செடிகள் வளர்ந்ததால், தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று கால்வாயில் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை கவுன்சிலர் ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.