வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, நெல்லையில் பாஜகவினர் சிறப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பாஜக மாவட்ட தலைவர் முத்துபலவேஷம் தலைமையில் அக்கட்சியினர் பொதுமக்கள் உடன் இணைந்து வந்தே மாதரம் பாடலைப் பாடி, முழக்கங்கள் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இந்த கொண்டாட்டம் வந்தே மாதரம் பாடலின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது.