திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1998-99ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்த மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒன்றாக சந்திக்கும் நெகிழ்வான நிகழ்வு நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்திய கல்யாணி செய்திருந்தார்.