நெல்லை; மது விற்ற 85 வயது முதியவர் கைது

நெல்லை மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இன்று ஆச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சிவந்திபட்டியைச் சேர்ந்த நீலையா(85) என்பவரை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமணி தலைமையிலான குழுவினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி