திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலம் 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் இன்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதல்வருக்கு தற்போதைய ஆட்சியின் அவலங்கள் குறித்து அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்வியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.