தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்காளி (55) என்ற பெண், வயிற்றுவலியால் பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். செவிலியர்களின் அலட்சியத்தால் தனது தாய் உயிரிழந்ததாகவும், ஒரு படுக்கை கூட ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் ஊர்காளியின் மகள் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.