திருநெல்வேலி அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகையில் இன்று, தமிழ்நாடு சிறு, குறு தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா தலைமையில், சிறு, குறு தொழில் துறையின் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் துறையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.