நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மேலப்பாளையத்தில் நேற்று இரவு போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் அங்கு காவலர்கள் இல்லாத நிலையில் மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா நேரடியாக களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலை இரவில் சீர் செய்தார்.