மானூர்; திடீர் மழையால் சேதமான நெல் பயிர்கள்

நெல்லை மானூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தரையில் சாய்ந்துள்ளன. இதனால், விவசாயிகள் இன்று அறுவடை செய்ய முடியுமோ முடியாதோ என்ற கலக்கத்தில் தங்கள் வயல்களை பார்வையிட்டனர். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி