நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் பாலாமடை ஊராட்சி காட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வந்தார். இவர் சிறிய விபத்தில் காயமுற்று நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரின் இறுதி சடங்கிற்கு செலவுகளை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்று இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.